என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திரையுலக பிரமுகர்கள்
நீங்கள் தேடியது "திரையுலக பிரமுகர்கள்"
சினிமா மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை இன்று திரையுலக பிரமுகர்கள் சந்தித்து வலியுறுத்தினார். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
மும்பை:
மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்தார்.
சினிமா, தனியார் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குழுவாக சென்று மும்பை நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தினர்.
உலகளாவிய அளவில் தங்களது துறைகள் மிகப்பரவலாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட இந்த குழுவினர், இந்த துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக மோடி வாக்குறுதி அளித்ததாக பிரதமரின் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவகன், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், கதாசிரியரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி, தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சித்தார்த்த ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi

உலக அரங்கில் இந்தியாவின் ஹாலிவுட் ஆக திகழ்ந்து வரும் மும்பை நகரத்தின் முன்னேற்றத்துக்கு உதவுமாறு பிரதமரை அவர்கள் கேட்டுகொண்டனர். தங்களது துறைக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக மோடி வாக்குறுதி அளித்ததாக பிரதமரின் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவகன், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், கதாசிரியரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி, தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சித்தார்த்த ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
×

X